வரிக்கு வரி! - இந்தியா, சீனாவை மிரட்டும் டிரம்ப்

அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்புக்கு ஏற்ற வகையில் செயல்படாவிட்டால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது வரி விதிக்கப்படும்'
 | 

வரிக்கு வரி! - இந்தியா, சீனாவை மிரட்டும் டிரம்ப்

வரிக்கு வரி! - இந்தியா, சீனாவை மிரட்டும் டிரம்ப்அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்புக்கு ஏற்ற வகையில் செயல்படாவிட்டால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மிரட்டும் விதமாகத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்குகளுக்கு இந்தியா இறக்குமதி வரி விதிக்கிறது. சீனாவும் அமெரிக்காவிலிருந்து தாயாரித்து விற்பனைக்கு வரும் கார்களுக்கு இதே போல வரி விதிக்கிறது. இதற்கு, அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், ''இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு, அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. அதனால், இந்தியாவும், வரி விதிக்க கூடாது.  இந்தியாவும், சீனாவும், வரி விதிப்பை குறைக்காவிட்டால், அமெரிக்காவும், பரஸ்பர வரி விதிப்பில் ஈடுபடும்'' என்று டிரம்ப் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP