லிபியா இரட்டை கார் குண்டுவெடிப்பு; 33 பேர் பலி

லிபியா கார் குண்டுவெடிப்பு; 33 பேர் பலி
 | 

லிபியா இரட்டை கார் குண்டுவெடிப்பு; 33 பேர் பலி


லிபியாவில் உள்ள பெங்காசி நகரில் நடந்த இரண்டு கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில், 33 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெங்காசியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே நேற்று இரவு கார் குண்டு வெடித்தது. பின்னர் அதே இடத்தில், ஆம்புலன்ஸ் வானங்கள் வந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம் மற்றொரு கார் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 33 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP