அதிபர் எழுதிய கடிதத்தில் எக்கச்சக்க பிழைகள்: திருத்தி அனுப்பிய ஆசிரியர்

வெள்ளை மாளிகையில் இருந்து வந்த கடிதத்தில் இருந்த இலக்கண பிழைகளை திருத்தி திருப்பி அனுப்பியுள்ளார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் ஒருவர்.
 | 

அதிபர் எழுதிய கடிதத்தில் எக்கச்சக்க பிழைகள்: திருத்தி அனுப்பிய ஆசிரியர்

அதிபர் எழுதிய கடிதத்தில் எக்கச்சக்க பிழைகள்: திருத்தி அனுப்பிய ஆசிரியர்வெள்ளை மாளிகையில் இருந்து வந்த கடிதத்தில் இருந்த இலக்கண பிழைகளை திருத்தி திருப்பி அனுப்பியுள்ளார் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் ஒருவர்.

அமெரிக்காவின் கிரீன்வைல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 17 வருடங்களாக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோவன் மேசோன். இவர் அமெரிக்காவின் பிளோரிடா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசும் படி டிரம்ப்புக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது. 

இதனை பெற்றுக்கொண்ட யோவன் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த கடிதத்தில் பல இலக்கண பிழைகள் இருந்துள்ளது. அவற்றையெல்லாம் யோவன் திருத்தி அந்த கடிதத்தின் மேல், "இதை அனுப்புவதற்கு முன் இலக்கண பிழைகள் இருக்கிறதா என்று பார்த்தீர்களா" என்று எழுதியுள்ளார். 

திருத்திய கடிதத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டுள்ள அவர், இந்த கடிதத்தை திருப்பி வெள்ளை மாளிகைக்கே அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP