எல்லையை மூடி விடுவேன்: ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தெற்கு எல்லையில் சுவர் கட்ட நிதி ஒதுக்காத காரணத்தினால், அந்நாட்டு அரசு முடங்கிக் கிடக்கும் நிலையில், தெற்கு எல்லையை ஒட்டுமொத்தமாக மூடி விடுவேன் என ட்ரம்ப் ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார்.
 | 

எல்லையை மூடி விடுவேன்: ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் 'சுவர்' கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத காரணத்தினால், அந்நாட்டு அரசு முடங்கிக் கிடக்கும் நிலையில், தெற்கு எல்லையை ஒட்டுமொத்தமாக மூடி விடுவேன் என ட்ரம்ப் ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை தடுக்க, தெற்கு எல்லையில் பெரிய சுவரை கட்ட உள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். இந்த திட்டம் பல தரப்பினரால் விமர்சனம் செய்யப்பட்டதோடு, நடைமுறையில் சாத்தியமில்லை, என பல வல்லுனர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும், அதை கட்டுவதில் தீர்மானமாக உள்ளார் ட்ரம்ப். இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லை. வேறுவழியில்லாமல், அமெரிக்க அரசு செயல்பட நிதி ஒதுக்கும் பட்ஜெட்டில் 5 பில்லியன் டாலரை தனது சுவர் திட்டத்திற்கு ஒதுக்க ட்ரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால், நாடாளுமன்றத்தின் மேல் சபையில் இந்த நிதிக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், அந்நாட்டின் அரசு இயங்குவதற்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் போனது. இதை தொடர்ந்து நாசா உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் நிதி இல்லாமல் முடங்கின. அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான பணியாளர்கள், தற்போது கிறிஸ்துமஸ் புதுவருட நாட்களில் சம்பளம் இல்லாமல் வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை சமரசம் ஏற்படாததால், அடுத்த ஆண்டு வரை இந்த முடக்கம் நீடிக்கவுள்ளது. 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், "சுவர் கட்ட நிதி ஒதுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தெற்கு எல்லையை மூடிவிடுவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு தேவையில்லாத திட்டத்திற்காக அமெரிக்க அரசை பிணயக்கைதியாக ட்ரம்ப் பிடித்து வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP