வட கொரியா மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான தடை

வட கொரியாவின் அணுவாயுத திட்டங்களைக் கைவிட நெருக்கடி கொடுக்கும் வகையில் அதன் மீது மிகக் கடுமையான புதிய தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
 | 

வட கொரியா மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான தடை

வட கொரியா மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான தடைவட கொரியாவின் அணுவாயுத திட்டங்களைக் கைவிட நெருக்கடி கொடுக்கும் வகையில் அதன் மீது மிகக் கடுமையான புதிய தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுவரை அமெரிக்காவால் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாத அளவுக்கு கடுமையான புதிய தடையை வட கொரியா சந்திக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, "வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு நிதி மற்றும் எரிபொருள் வழங்கவும், அதன் ராணுவத்தை நிலைநாட்டவும் உதவும் வகையில் செயல்படும் 56 கப்பல்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலக்கு வைத்து விரைவில் இவற்றுக்கான வருவாய் மற்றும் எரிபொருள் ஆதாரங்களை துண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை கருவூலத் துறை விரைவில் துவங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை விதிப்பின் மூலம், உலக நாடுகளுக்கு அடாவடி காட்டும் வடகொரியா இனி அணு ஆயுத பொருட்கள், ஏவுகணை உற்பத்தி பொருட்கள் வாங்குவதை தடுக்கும் முயற்சியாக இந்த தடை அமையும் எனத் தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP