கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய விமானம்; 5 பேர் பலி

கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றின் கார் பார்க்கிங் மீது சிறிய விமானம் ஒன்று மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய விமானம்; 5 பேர் பலி

கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றின் கார் பார்க்கிங் மீது சிறிய விமானம் ஒன்று மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கலிபோர்னியாவின் தெற்கே சாண்டா அனா என்ற பகுதியில் பிரபல சவுத் கோஸ்ட் பிளாசா என்ற மிகப்பெரிய மால் உள்ளது. இந்த மாலின் கார் பார்க்கிங் பகுதியில் விமானம் ஒன்று வேகமாக வந்து தரையிறங்கியுள்ளது. அங்குள்ள கார்கள் மீது மோதியதில் பொதுமக்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பலரும் மேலும் அங்கு சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளது. ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவரின் உடல்நிலை மிகவும் கல்வைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய விமானம்; 5 பேர் பலி

தொடர்ந்து இது தொடர்பாக  காவல்துறை விசாரணை செய்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், விமானத்தில்ஏற்பட்ட  கோளாறு காரணமாக மாலுக்கு அருகே உள்ள இடத்தில் தரையிறங்க அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மால் கார் பார்க்கிங் அருகே தரையிறங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP