கிம் - ட்ரம்ப் சந்திப்புக்கான நாள் குறிச்சாச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ள உச்சி மாநாட்டிற்கான தேதியை உறுதி செய்துவிட்டதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

கிம் - ட்ரம்ப் சந்திப்புக்கான நாள் குறிச்சாச்சு!

கிம் - ட்ரம்ப் சந்திப்புக்கான நாள் குறிச்சாச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ள உச்சி மாநாட்டிற்கான தேதியை உறுதி செய்துவிட்டதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுதம் தயாரிப்பது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவது என வடகொரியா பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியாவுக்கு தொடர்ந்து கண்டனம் விடுத்து வந்த நிலையில், ஐ.நா-வும் பல பொருளாதார தடைகளை விதித்தது. 

இதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்மை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வந்தார்.  பல்வேறு பேச்சுக்கள் மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து, வடகொரியா மற்றும் தென் கொரியா இணக்கமான சூழலை கைப்பிடிக்க துவங்கியது. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் துவங்கி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதிபர் கிம்மை தென் கொரிய அதிபர் மூன் முதல்முறையாக  நேரில் சந்தித்தார்.

பின்னர், அமெரிக்காவுடன் வடகொரியா சமாதானம் பேச தூது விட்டது. ட்ரம்ப் கிம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கிம் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற அழைப்புகளை அமெரிக்க அதிபர்கள் ஏற்பதில்லை. ஆனால, ட்ரம்ப் உடனடியாக அழைப்பை ஏற்று, சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ கிம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த மாதம் சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான தேதி உறுதி செய்யப்பட்டு விட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP