ட்ரம்பிடம் கிம் மண்டியிட்டு கெஞ்சினார்: ட்ரம்ப் வழக்கறிஞர் கூறுகிறார்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், அமெரிக்க அதிபரின் ட்ரம்பின் வழக்கறிஞருமான ரூபி கிலியனி தெரிவித்துள்ளார்
 | 

ட்ரம்பிடம் கிம் மண்டியிட்டு கெஞ்சினார்: ட்ரம்ப் வழக்கறிஞர் கூறுகிறார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மண்டியிட்டு கெஞ்சியதால்தான் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்துக்கொண்டார் என்று நியூயார்க் நகர முன்னாள் மேயரும், அமெரிக்க அதிபரின் ட்ரம்பின் வழக்கறிஞருமான ரூபி கிலியனி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த வட கொரிய அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள் என்று அறிவிப்பு வெளியான போது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருவரும் வருகிற 12ம் தேதி, சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. 12ம் தேதி வரை பேச்சு வார்த்தை நடைபெறுவது உறுதியில்லை என்பதுபோலத்தான் இருக்கிறது இரு நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கையும். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், அமெரிக்க அதிபரின் ட்ரம்பின் வழக்கறிஞருமான ரூபி கிலியனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தென் கொரியாவுடன் அமெரிக்க நடத்தவிருந்த ராணுவ பயிற்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியது. ஆனால், அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, "அணு ஆயுதங்களை தாங்கள் விட்டுத்தர வேண்டும் என்றால், அமெரிக்கா தனது படைகளை கொரிய தீபகற்பத்தில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும், இல்லையென்றால் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது" என வடகொரியா கூறியது.

அதன்பின், ட்ரம்ப் தரப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், வடகொரியா, அணு ஆயுதங்களை விட்டுத்தரவில்லை என்றால், போர் மூளும் என எச்சரித்தார். அதை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பிரதிபலித்தார். இதைத் தொடர்ந்து கடுப்பான வடகொரியா, அமெரிக்க துணை அதிபரை ஒரு அரசியல் பொம்மை என விமர்சித்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் திடீரென கடந்த வாரத்தில் வடகொரிய ராணுவ உயர் அதிகாரி கிம் யோங் சோலை, ட்ரம்ப்பை சந்திக்க அனுப்பி வைத்தார் வட கொரிய அதிபர் கிம். அப்போது அவரிடம் பெரிய கடிதத்தை கிம் கொடுத்தனுப்பியதும் அதை படித்த பிறகு மனம் மாறிய ட்ரம்ப், முன்பு அறிவித்தபடி ஜூன் 12-ஆம் தேதி கிம்  உடன் சந்திப்பு நிகழும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP