இவான்கா டிரம்ப் ஒரு அடிமுட்டாள்: வெள்ளை மாளிகை ஆலோசகர்

இவான்கா டிரம்ப் ஒரு அடிமுட்டாள்: வெள்ளை மாளிகை ஆலோசகர்
 | 

இவான்கா டிரம்ப் ஒரு அடிமுட்டாள்: வெள்ளை மாளிகை ஆலோசகர்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்டீவ் பேனன், வெள்ளை மாளிகை சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். பல சர்ச்சைகளுக்கு நடுவே அவர், சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளை பேட்டியெடுத்த ஒரு நிருபர் அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள விவரங்கள் நேற்று வெளியாகின. அதில், ஸ்டீவ் பேனன் உட்பட பலர் ஒருவரை ஒருவர் தரைகுறைவாக பேசிய விவரங்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்துவது குறித்து திட்டமிட்டார் என பேனன் கூறினார். அது தேசத் துரோகம் என அவர் விமர்சித்தார். மேலும், டிரம்ப்பின் மகள் இவான்கா ஒரு அடிமுட்டாள் என்றும் பேனன் கூறியிருந்தாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் வெற்றி பெறுவது டிரம்ப்பின் எண்ணமே கிடையாது என்றும், தேர்தலில் நிற்பதில் கிடைக்கும் பணத்தையும், புகழையும் பெற்றுக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் தொழில்களை மீண்டும் கவனித்துக் கொள்ளலாம் என்றும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி தெரிந்தவுடன், டிரம்ப் அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருந்ததாகவும், அவரது மனைவி மெலானியா அழுது கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் அந்த தொகுப்பாளரிடம் கூறியுள்ளனர்.

இந்த புத்தகத்தில் வந்த எந்த தகவலையும் டிரம்ப்பின் தரப்பு குறிப்பிட்டு மறுக்கவில்லை. ஆனால், தனக்கு எதிராக பேசிய முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனனை, கடுமையாக விமர்சித்து டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP