ஊழல் வழக்கில் கைதாகிறாரா இஸ்ரேல் பிரதமர்??

ஊழல் வழக்கில் கைதாகிறாரா இஸ்ரேல் பிரதமர்??
 | 

ஊழல் வழக்கில் கைதாகிறாரா இஸ்ரேல் பிரதமர்??


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மீது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் மீது இஸ்ரேல் அட்டர்னி ஜெனரல் ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது

விசாரணையின் முடிவில் இஸ்ரேல் நாட்டு போலீசார் பிரதமர் நேதன்யாகு குற்றவாளி என தீர்வுக்கு வந்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரலிடம் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆர்னான் மில்ச்சான் என்ற பிரபல இஸ்ரேலி ஹாலிவுட் தயாரிப்பாளர் உட்பட பலரிடம் இருந்து பல விலை மதிப்புள்ள அன்பளிப்புகளை நேதன்யாகு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட அதிபர் நேதன்யாகு, தான் நிரபராதி என வாதிட்டார். "நமது நாட்டில், அரசு தான் சட்டம். நாட்டின் அட்டர்னி ஜெனரல் தான் யார் யார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இதுபோன்ற பரிந்துரைகளில் பாதியில் தான் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வழக்கு பதிவு செய்யும் என அரசு வழக்கறிஞர் சமீபத்தில் கூட தெரிவித்துள்ளார். அதனால் யாரும் பயப்பட தேவையில்லை. சட்ட வல்லுநர்கள் சேர்ந்து நல்ல முடிவுக்கு வருவார்கள். என் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையுமில்லை" என அந்த வீடியோவில் நேதன்யாகு கூறியிருந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP