பணமோசடி விவகாரத்தில் சிக்குகிறாரா டிரம்ப்??

பணமோசடி விவகாரத்தில் சிக்குகிறாரா டிரம்ப்?? புதிய விசாரணை
 | 

பணமோசடி விவகாரத்தில் சிக்குகிறாரா டிரம்ப்??


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ரஷ்ய தொழிலதிபருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டாரா என அமெரிக்க நாடாளுமன்ற சபை விசாரித்து வருகிறது.

தொழிலதிபராக இருந்த டிரம்ப், தேர்தலில் நின்று எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தினார். ஆனால், தேர்தலின் போது, ஹேக்கர்கள் மூலமாக ஹிலாரியின் ஈ-மெயில்களை ஹேக் செய்ய ரஷ்ய அரசு உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது. ஒபாமா அதிபராக இருந்தபோது, ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் போடப்பட்டன. ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு, அந்த பொருளாதார தடைகளை செயல்படுத்த முடியாது என கூறிவிட்டார்.

தேர்தலில் ஹிலாரியை ஹேக் செய்ய டிரம்ப்பின் ஆலோசகர்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்ததாக பல தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து விசாரிக்க, விசேஷ கமிட்டி நியமனம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான தகவலின் படி, ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் டிரம்ப்பின் மகன் ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும், ஹிலாரியின் ஈமெயில்களை ஹேக் செய்வது குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஹிலாரியை பற்றி அந்த சந்திப்பில் பேசவில்லை என டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் கூறிவிட்டார்.

ரஷ்யாவுடன் இதுபோன்ற பல்வேறு ரகசிய தொடர்புகள் வைத்திருந்த, டொனால்ட் டிரம்ப், அரசியலுக்கு வரும் முன், பலமுறை பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 2008ம் ஆண்டு, ரஷ்ய தொழிலதிபர் ஒருவருக்கு டிரம்ப் ஒரு சொகுசு பங்களாவை விற்றார். சுமார் 100 மில்லியன் டாலர்களுக்கு அந்த பங்களாவை விற்ற டிரம்ப், 4 வருடங்களுக்கு முன்பு அதே பங்களாவை வெறும் 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதாக தெரிய வந்துள்ளது. சந்தை விலையை விட 30 மில்லியன் டாலர்கள் அதிகம் கொடுத்து அந்த தொழிலதிபர் டிரம்ப்பிடம் இருந்து பங்களாவை வாங்கியது அமெரிக்க அதிகாரிகளிடையே சந்தேகங்களை எழுப்பியது. மேலும், அவ்வளவு தொகை கொடுத்த பங்களாவை அந்த தொழிலதிபர் ஒருமுறை கூட பயன்படுத்த வில்லை என்பது மேலும் சந்தேகங்களை எழுப்பியது. இது பண மோசடி செய்ய கையாளப்பட்ட யுக்தியா என விசாரிக்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு, அது குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது, அந்த பங்களா விற்பனை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள எதிர்க்கட்சியின் செனட் சபை உறுப்பினரும், நாடாளுமன்ற கருவூல துணைத் தலைவருமான ரான் வைடன், தற்போது புதிய விசாரணை துவங்கியுள்ளார். ரஷ்யா தொழிலதிபர்கள் பணத்தை மோசடி செய்ய பல வருடங்களுக்கு முன் டிரம்ப் உதவி வந்தாரா என்பது குறித்து அவர் விசாரித்து வருகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP