ட்ரம்ப் மன மாற்றத்துக்கு அந்தக் கடிதம் தான் காரணமா?

வட கொரிய அதிபருடனான சந்திப்பை ரத்து செய்த ட்ரம்ப் திடீரென மனம் மாறி பேச்சுவார்த்தை நடக்கப் போவதாக அறிவித்தார். இந்த மன மாற்றத்துக்கான அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
 | 

ட்ரம்ப் மன மாற்றத்துக்கு அந்தக் கடிதம் தான் காரணமா?

வட கொரிய அதிபருடனான சந்திப்பை ரத்து செய்த ட்ரம்ப் திடீரென மனம் மாறி பேச்சுவார்த்தை நடக்கப் போவதாக அறிவித்தார். இந்த மன மாற்றத்துக்கான அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

கடந்த வாரத்தில் வடகொரிய ராணுவ உயர் அதிகாரி கிம் யோங் சோலை, ட்ரம்ப்பை சந்திக்க அனுப்பி வைத்தார் வட கொரிய அதிபர் கிம். அப்போது அவரிடம் பெரிய கடிதத்தை கிம் கொடுத்தனுப்பியதும் அதை படித்த பிறகு மனம் மாறிய ட்ரம்ப், முன்பு அறிவித்தபடி ஜூன் 12-ஆம் தேதி கிம்  உடன் சந்திப்பு நிகழும் என தெரிவித்தார் என்றும் இருத் தரப்பு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 

ட்ரம்ப் மன மாற்றத்துக்கு அந்தக் கடிதம் தான் காரணமா?

இருப்பினும் இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ட்ரம்ப், எனினும் உடனடியாக எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னணி

அணு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டனர். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யபட்டுள்ளது. முன்னதாக தென் கொரியாவுடன் அமெரிக்க நடத்தவிருந்த ராணுவ பயிற்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியது. ஆனால், அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, "அணு ஆயுதங்களை தாங்கள் விட்டுத்தர வேண்டும் என்றால், அமெரிக்கா தனது படைகளை கொரிய தீபகற்பத்தில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும், இல்லையென்றால் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது" என வடகொரியா கூறியது.

அதன்பின், ட்ரம்ப் தரப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், வடகொரியா, அணு ஆயுதங்களை விட்டுத்தரவில்லை என்றால், போர் மூளும் என எச்சரித்தார். அதை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பிரதிபலித்தார். இதைத் தொடர்ந்து கடுப்பான வடகொரியா, அமெரிக்க துணை அதிபரை ஒரு அரசியல் பொம்மை என விமர்சித்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP