டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க ஜப்பான் பரிந்துரையா?

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க ஜப்பான் பிரதமர் ஆபே பரிந்துரை செய்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்க அரசின் கோரிக்கையை தொடர்ந்தே, ஆபே பரிந்துரை செய்ததாக ஜப்பானில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க ஜப்பான் பரிந்துரையா?

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க ஜப்பான் பிரதமர் ஆபே பரிந்துரை செய்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்க அரசின் கோரிக்கையை தொடர்ந்தே, ஆபே பரிந்துரை செய்ததாக ஜப்பானில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அமைதிக்கான நோபல் பரிசுக்காக தன்னை பரிந்துரை செய்ததாக தெரிவித்தார். இது குறித்து, கடந்த ஆண்டு தன்னை அவர் பரிந்துரை செய்து எழுதிய கடிதத்தை தன்னிடம் வழங்கியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

பொதுவாகவே நோபல் பரிசுக்கு பரிந்துரை ரகசியமாக வைக்கப்படும் நிலையில், ஜப்பான் பிரதமர் அவரை பரிந்துரை செய்ததாக ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட தான் முக்கிய காரணமாக இருந்ததால், தனக்கு நோபல் பரிசை வழங்க வேண்டும் என ஆபே கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த செய்தி வெளியானவுடன், வெள்ளை மாளிகை மற்றும் ஜப்பான் பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ட்ரம்ப்பை ஆபே பரிந்துரை செய்ததாக ஜப்பான் தரப்பில் கூறப்பட்டாலும், அமெரிக்க அரசில் இருந்து வந்த கோரிக்கையை தொடர்ந்தேஅவர் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பானை சேர்ந்த பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ய ஜப்பான் அதிபருக்கு அமெரிக்க அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதை தொடர்ந்தே அவர் பரிந்துரை கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP