டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியா?: பதறவைக்கும் மாஜி எஃப்.பி.ஐ தலைவர்

ரஷ்யாவின் ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ஆண்ட்ரூ மெக்கேப், ட்ரம்ப் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம், என அதிரவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 | 

டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியா?: பதறவைக்கும் மாஜி எஃப்.பி.ஐ தலைவர்

ரஷ்யாவின் ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ஆண்ட்ரூ மெக்கேப், ட்ரம்ப் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம், என அதிரவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2016 அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யா பின்னணியில் பல்வேறு ஹேக்கர்கள் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து எஃப்.பி.ஐ தீவிர விசாரணை செய்து வந்தது. இந்த விசாரணையில் ட்ரம்பின் பிரச்சாரக் குழுவில் இருந்து பலர் ட்ரம்ப்புடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ட்ரம்ப்புக்கு நெருக்கமான பலர், விசாரணை ஆணையம் மற்றும் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது அனைத்துமே ட்ரம்ப்புக்கு தெரியாமல் நடைபெற்றது, என அவர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ-யின் தலைவர் ஜேம்ஸ் கோமியை ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். ரஷ்ய விசாரணை தன்னை நெருங்குவதன் காரணமாகவே அவரை நீக்கியதாவும் ட்ரம்ப் கூறி சர்ச்சையை கிளப்பினார். அதைத்தொடர்ந்து எஃப்.பி.ஐ தலைவராக ஆண்ட்ரூ மெக்கேப் உயர்ந்தார்.

இவரும், பின்னர் ட்ரம்ப்பால் நீக்கப்பட்டார். அமெரிக்க ஊடகங்களில் சமீபத்தில் பேட்டியளித்த மெக்கேப், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப்புக்கும் பல்வேறு தொடர்புகள் இருப்பதாக தங்களது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். மேலும், ஒரு கட்டத்தில் ட்ரம்ப் ரஷ்யாவின் உளவாளியாக இருக்கலாம், என்று தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் பேசியபோது "வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை அறிக்கை தெரிவித்தது. ஆனால், அதிபர் ட்ரம்போ, வடகொரியாவிடம் அணு ஆயுதம் இல்லை, என்று ரஷ்ய அதிபர் புடின் தன்னிடம் சொன்னதாக எங்களிடம் கூறினார். நாங்கள் அதை  மறுத்தபோது, நீங்கள் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் புடின் சொல்வதை நம்புகிறேன், என்று கூறி எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்" என்று கூறினார். ஏற்கனவே ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP