வட கொரியா பின்வாங்க சீனா தான் காரணமா?- ட்ரம்ப் குற்றச்சாட்டு

வட கொரியா பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்குவதற்கு சீனாவின் ஊந்துதல் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
 | 

வட கொரியா பின்வாங்க சீனா தான் காரணமா?- ட்ரம்ப் குற்றச்சாட்டு

வட கொரியா பின்வாங்க சீனா தான் காரணமா?- ட்ரம்ப் குற்றச்சாட்டுவட கொரியா பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்குவதற்கு சீனாவின் உந்துதல் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி இருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்னர், திட்டமிடப்பட்ட வட கொரியா - தென் கொரியா இடையே ஆன சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. அடுத்த மாதம் அமெரிக்காவுடன் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இது குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்கையில், "பேச்சுவார்த்தை குறித்து பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அது நடக்கலாம். நடக்காமல் போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு நாம் நகர வேண்டும். 

மேலும், சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்த பிறகே கிம் இப்படி மாறியுள்ளதாக தெரிகிறது. சீனா, இந்த சிங்கப்பூர் சந்திப்பு நடக்க கூடாது என நினைத்து மடை மாற்றியிருக்கலாம்" என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

வட கொரியா பின்வாங்க சீனா தான் காரணமா?- ட்ரம்ப் குற்றச்சாட்டு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை முழுவதுமாக தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது.

அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதற்கிடையே, தென்கொரியா உடனான சமீப்பு ரத்தானதை தொடர்ந்து, ட்ரம்ப் உடனான சந்திப்பிலிருந்து விலகுவோம் எனவும் வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP