ஈரானில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தடை!

ஈரானில் ஆரம்பப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

ஈரானில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தடை!


ஈரானில் ஆரம்பப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் நாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க கூடாது என அந்நாட்டு முஸ்லீம் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். சிறுவயதிலே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால் குழந்தைகள் மேலைநாட்டு பழக்கவழக்கங்களையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக ஈரான் நாட்டு கலாச்சாரம் குறைந்து வருகிறது. எனவே, சிறுவயதில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனையடுத்து, ஈரானில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க தடை விதித்து அந்நாட்டு கல்வித்துறைக்கான உயர்நிலைக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 'அனைத்து அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இது பொருந்தும். அதேநேரத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத்தரப்படும்' எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP