அமெரிக்காவை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்ததை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.
 | 

அமெரிக்காவை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்ததை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவித் ஜரிப், "ஈரானுடனான உறவு மற்றும் சட்டபூர்வமான கடமைகளை அமெரிக்கா அவமதித்துவிட்டது. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது இகிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்த அமேரிக்கா வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொண்டது. 

அந்தபடி, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இதனிடையே, தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த மே மாதம் அறிவித்தார். அதோடு அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். 

மேலும், அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், கச்சா  எண்ணெய் கொள்முதளை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP