ஐபோன் சார்ஜர் மோசடி: ஆப்பிள் மீது புதிய வழக்கு

ஐபோன் மொபைல்களின் சார்ஜர்களை செயல்படாமல் போக வைத்து, புதிய சார்ஜர்கள் வாங்க வாடிக்கையாளர்களை வற்புறுத்தியதாக, ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 | 

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஆப்பிள் மீது புதிய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சார்ஜர்கள் செயல்படாமல் போக வைப்பதாகவும்; புதிய சார்ஜர்கள் வாங்க வற்புறுத்தியதாகவும் ஆப்பிள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு இதுபோல பல வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த ஐபோன் மொபைல்களின் சார்ஜர் வேலை செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் பழைய சார்ஜர்கள் செயல்படாதவாறு ஆப்பிள் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா நகரை சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம் ஆப்பிள் மீது பொது வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால், தாங்கள் பழைய சார்ஜர்கள் செயல்படாமல் போக வைக்க வில்லை, என்றும் அந்த சார்ஜர்கள் கோளாறு காரணமாக வீணாவதால் தான் இந்த தவறு நடந்துள்ளதாகவும், ஆப்பிள் விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP