தகவல் திருட்டு விவகாரம்: கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு 

கூகுள் பிளஸ் சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 500,000க்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது
 | 

தகவல் திருட்டு விவகாரம்: கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு 

கூகுள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் பிளஸ் வழியாக திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கூகுள் பிளஸ் சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 2011-ம் ஆண்டு சமூக வலைத்தளம் என்ற வகையில் கூகுள் பிளஸ் வலைத்தளத்தை தொடங்கியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் அமைந்தது. இருப்பினும் சந்தையில் போட்டுப்போட முடியாத நிலையில் கூகுள் பிளஸ் இருந்தது.  

இதனிடையே கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைதளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,'' கூகுள் ப்ளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்ங்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கூகுள் பிளஸ் மூடப்படுவதால் அதனுடன் இணைக்கப்பட்ட செல்ஃபோன் எண்கள் பட்டியல், கூகுள் பிளஸ் போஸ்டு, கூகுள் அகவுன்ட் டேடா அல்லது ஜி சூட் போன்றவற்றை பாதிக்காது என்ற விளக்கத்தையும் கூகுள் வழங்கியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP