உலகின் மாசடைந்த நகரங்கள் எல்லாம் இந்தியாவில்! அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மிக மாசமடைந்த 20 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
 | 

உலகின் மாசடைந்த நகரங்கள் எல்லாம் இந்தியாவில்! அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மாசடைந்த நகரங்கள் எல்லாம் இந்தியாவில்! அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மிக மாசமடைந்த 20 நகரங்களின் ப‌ட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

காற்று மாசு விதிகளின் படி 2.5 அடர்த்தியுள்ள நுண் துகள்களின் அடிப்படையில் மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதா‌ர நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப‌ட்டியலில் கான்பூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது போக டெல்லி, வாரணாசி, ஃபரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முஸாபர்பூர், ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் இதில் இடம்பிடித்துள்ளன.‌‌ தலைநகர் டெல்லியில் 2010 முதல் 2‌014 வரையிலான காலகட்டத்தில் காற்று மாசு குறைந்திருந்தாலும் 2015ஆம்‌ ஆண்டுக்கு பிறகு மீண்டும் மோசமடைய தொடங்கி இருப்பது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளில் 10 இல் ஒன்பது பேர் மாசடைந்த காற்றை சுவாசித்து உயிரிழந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காற்று மாசால் ஏற்பட்டு, கால்வாசி உயிர்களை பலி வாங்கி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்ததை விட, தற்போது 50 சதவிகித அளவுக்கு காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே உலக நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த எந்த ஒரு நகரமும் இடம் பெறவில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று தேசிய கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், தேசிய கட்சிகள் ஆண்ட, ஆளும் மாநிலங்களில்தான் இந்த மாசடைந்த நகரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP