அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்!

ஹைதராபாதை பூர்வீகமாகக் கொண்ட கோவர்த்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் பென்ஸகோலா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துடன் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 | 

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஹைதராபாதை பூர்வீகமாகக் கொண்ட கோவர்த்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் பென்ஸகோலா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துடன் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ளனர்.

இவர் வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார். 

இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சுமார் 11 மணிக்கு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவரது சகோதரர் கூறுகையில், "எனது சகோதரர் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருந்தார். தற்போது அமெரிக்கா சென்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. எதனால் அவரை கொன்றனர் என தெரியவில்லை. இது தொடர்பாக இந்திய அரசு அமெரிக்காவை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP