இந்தியர்களின் வாழ்நாள் குறைகிறது!- ஏன் தெரியுமா? 

இந்தியர்களின் சராசரி வாழ்நாள் காற்று மாசுபாட்டினால் 1.5 வருடம் குறைகிறது என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.
 | 

இந்தியர்களின் வாழ்நாள் குறைகிறது!- ஏன் தெரியுமா? 

இந்தியர்களின் சராசரி வாழ்நாள் காற்று மாசுபாட்டினால் 1.5 வருடம் குறைகிறது என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்பட்டு ஆதன் விளைவாக மனிதர்களின் வாழ்நாள் குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலை கழக ஆய்வாளர்கள் காற்று மாசுபாடு, மனிதர்களின் வாழ்நாள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளனர். காற்று மாசுபாடு மற்றும் மனிதர்களின் வாழ்நாள் இரண்டும் இணைந்த ஓர் ஆய்வு முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆய்வில் 2.5 மைக்ரான்கள் அளவிற்கு சிறிய துகள்கள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த சிறிய துகள்கள் நுரையீரல்களுக்குள் ஆழமுடன் சென்று மாரடைப்புகள், ஸ்டிரோக்குகள், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாக்கும்.

இந்த துகள்கள் மின் உலைகள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள், நெருப்பு, வேளாண் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படுகின்றன. பெரிய அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ள நாடுகளாக முதல் இடத்தில் இருப்பது வங்கதேசம் (1.87 ஆண்டுகள்), எகிப்து (1.85 ஆண்டுகள்), பாகிஸ்தான் (1.56 ஆண்டுகள்), சவூதி அரேபியா (1.48 ஆண்டுகள்), நைஜீரியா (1.28 ஆண்டுகள்) மற்றும் சீனா (1.25 ஆண்டுகள்) ஆகிய நாடுகளில் வாழ்நாளில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டு உள்ளது.  இந்தியாவை பொறுத்தவரையில் 1.53 ஆண்டுகள் வாழ்நாள் பாதிப்பு ஏற்படுகிறது. இது போல 185 நாடுகளுக்கான ஆய்வு முடிவை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவர் ஜோசுவா ஆப்தே கூறுகையில், ஆசியாவில் காற்று மாசுபாடுகளால் ஏற்படும் உயிரிழப்பு ஆபத்து குறைக்கப்பட வேண்டும். இதன் மூலம் 60 வருடங்கள் வாழ கூடிய ஒருவர் 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக 85 அல்லது அதற்கு மேல் வாழ முடியும். காற்றின் தரம் நல்ல முறையில் இருந்தால் உலக அளவில் மனிதர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP