அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை !

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிறிஸ்துமஸ் அன்று இரவில் ஓவர் டைம் வேலை பார்த்து வந்த அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.
 | 

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை !

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்திய வம்சாவளி காவல்துறை அதிகாரி ரோனில் சிங் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி அனாமிகா. இந்த தம்பதியினருக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோனில், பிஜி தீவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். நியூமேன் போலீஸ் படையில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். ரோனில் சிங், கலிபோர்னியா நகரில் கிறிஸ்துமஸ் அன்று இரவில் ஓவர் டைம் வேலை பார்த்து வந்தார். சாலை போக்குவரத்தை கவனித்து வந்த அவரை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP