அமெரிக்காவில் பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்

மாணவர் விசாவை நீட்டிக்கும் வகையில் போலியான அட்மிஷன் வழங்கி வந்த பல்கலைக்கழகத்தை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ள 129 இந்திய மாணவர்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 | 

அமெரிக்காவில் பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்

அமெரிக்காவில் விசா நீட்டிப்பு பெறுவதற்காக மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 130 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 129 பேர் இந்தியர்கள் என்பது பெரும் அதிர்ச்சிக்குரிய தகவலாக இருக்கிறது.

அமெரிக்காவின் ஓக்லாந்து மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை, உள்நாட்டு பாதுகாப்புத் துறை மிக நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளது. இதில், மாணவர் விசா அடிப்படையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க ஏதுவாக பணத்தை பெற்றுக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தில் போலியாக அட்மிஷன் போடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாணவர் விசா பெறுவதற்காக அந்த பல்கலைக்கழகத்தில் இணைந்த 130 மாணவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 129 பேர் இந்தியர்கள். சர்ச்சைக்குள்ளான அந்த பல்கலைக்கழகமே போலியானது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த விவரம் எதுவும் இந்திய மாணவர்களுக்கு தெரியாது என்று இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதே சமயம், சிக்கலில் மாட்டியுள்ள மாணவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்காக 202-322-1190 மற்றும் 202-340-2590 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP