அமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்?

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
 | 

அமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்?

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வர்த்தக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் 74 ரூபாய் வரை இதுவரை இல்லாத சரிவை சந்தித்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சறுக்கலாக இந்திய ரூபாயை கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க ட்ரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் எடுக்கப்பட்ட சில முன்னேற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கோளிட்டு, அமெரிக்க கருவூலத் துறை தனது கவலையை தெரிவித்து உள்ளது. 

இதே போல, கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்தியாவை கொண்டு வந்தது. 

அமெரிக்காவின் கருவூலத் துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாதுகளின் பணங்கள் மட்டும் இந்த பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். 

ஜிஎஸ்டி வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. மிக முக்கியமாக கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது.

இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாயை நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்ப்போம், அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என்றுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP