அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் அமெரிக்காவில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் உள்ள ஒலாத் நகரில், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது நண்பருடன் அங்குள்ள பார் ஒன்றுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது, இனவெறி பிடித்த ஒரு நபர் சரமாரியாக அவரை நோக்கி துப்பாக்கியால் சுட, ஸ்ரீனிவாஸ் பலியானார். அவருடன் இருந்த மற்றொரு இந்தியர் அலோக் மதஸ்னி காயமடைந்தார். அந்த பாரில் இருந்த ஒரு அமெரிக்கர், ஸ்ரீனிவாஸ் மற்றும் மதஸ்னியை காப்பாற்ற முயற்சித்து குண்டடி பட்டு காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஆடம் புரிங்டன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கான்சஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தீர்ப்பை தொடர்ந்து, ஸ்ரீனிவாஸின் மனைவி சுனையானா துமாலா, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "அமெரிக்காவில் குடியேறிய எண்ணற்றோரை போல, ஸ்ரீனிவாஸும் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கியே வந்தார். விமானத்துறையில் சாதனை படைக்க ஆவலோடு இருந்தார். கார்மின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், தனது வேலையை நினைத்து பெருமைப்படுவார். யாரையும் எந்த நேரத்திலும் துன்புறுத்த வேண்டும் என அவர் நினைத்ததே இல்லை. எல்லோரும் அப்படித்தான் வாழ வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP