இந்திய குழந்தைகள் மதவேறுபாடு பார்ப்பதில்லை- ஆய்வில் தகவல்

உலக அளவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய குழந்தைகள் தான் பிறநாட்டு குழந்தைகளுடன் மதவேறுபாட்டுடன் பழகுவதில்லை என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.
 | 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த பல்கலைக்கழகமான சாண்ட் க்ரூஸ் நடத்திய ஆய்வில், இந்திய குழந்தைகள் மதவேறுபாடின்றி பழகுவதாகவும், பிற மதத்தை சேர்ந்த குழந்தைகளிடம் இழிவாக நடந்துகொள்வது இல்லை என்றும் தெரியவந்துள்ளது. பிற்காலத்தில் மதகலவரங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. பிற குழந்தைகள் மதம் தொடர்பான கருத்துக்களை கூறினால் அதற்கு இந்திய குழந்தைகள் மறுப்பு தெரிவிப்பது இல்லை என்றும், தங்கள் மதத்தினை பற்றி எதிர்மறையான கருத்துகளை பிறர் கூறினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 

சாதி கலவரத்தையும், மத கலவரத்தையும் தூண்டும் தேசத்தில் இந்திய குழந்தைகளின் இந்த ஒற்றுமை ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி இந்துக்களுக்கும்- இஸ்லாமியர்களுக்கும் பாகுபாடு வர வாய்ப்பே இல்லை என்பது இந்த ஆய்வில் இருந்து தெளிவாக தெரிகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP