இந்திய கால் சென்டர் வேலைகளுக்கு ஆபத்து!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு கால் சென்டர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய கால் சென்டர்களுக்கு ஆபத்து என கூறப்படுகிறது.
 | 

இந்திய கால் சென்டர் வேலைகளுக்கு ஆபத்து!

இந்திய கால் சென்டர் வேலைகளுக்கு ஆபத்து!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு கால் சென்டர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய கால் சென்டர்களுக்கு ஆபத்து என கூறப்படுகிறது.

அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள கால் சென்டர் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளன. அமெரிக்காவை விட இங்கு நடத்தப்படும் கால் சென்டர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவு என்பதால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கால் சென்டர் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாட்டு மக்களுக்கு தொலைபேசி மூலம் உதவி வழங்கும் இந்த கால் சென்டர்களால், அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இருந்து வந்தது.

வெளிநாட்டவர்களிடம் பேசுகிறோம் என தெரிந்தால், சில அமெரிக்க மக்களுக்கு பிடிக்காது என்பதால், அமெரிக்கர்களை போல தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, இதுபோன்ற கால் சென்டர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பேசும் கால் சென்டர் ஊழியர்கள், தாங்கள் உண்மையிலேயே எந்த நாட்டில் இருந்து பேசுகிறோம் என வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டுமாம். அதன்பின், அந்த வாடிக்கையாளர், அமெரிக்க நாட்டு ஊழியரிடம் தான் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டால், அந்த இணைப்பை அமெரிக்க ஊழியர்களிடம் மாற்ற வேண்டும், என்ற புதிய விதியை அமல்படுத்துகிறது. 

உள்நட்டு கால் சென்டர் நிறுவனங்கள் வளர இந்த மசோதா உதவும் என அதை அவைக்கு கொண்டு வந்துள்ள செனட்டர் ஷெர்ரட் ப்ரவுன் தெரிவித்துள்ளார். ஆனால்,  இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இயங்கி வரும் கால் சென்டர்களுக்கு ஆபத்து என நிபுணர்கள் கூறுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP