தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி

தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், நமது பாதுகாப்புஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசியில் பேசினார்.
 | 

தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், நம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இக்கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து தமது ஆழ்ந்த வருத்தத்தை ஜான் போல்டன் தெரிவித்தார்.  மேலும், தன்னை தற்காத்துக் கொள்ள எல்லாவித உரிமையும் இந்தியாவுக்கு உண்டு. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்.

மேலும், இத்தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்களையும் ,மூளையாக செயல்பட்டுள்ளோரையும் சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்த ஜான் போல்டன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP