ஆப்கான் தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா கண்டனம்

ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 | 

ஆப்கான் தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா கண்டனம்


ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பயங்கரவாதிகள் ஆம்புலன்ஸில் மறைத்து வைத்து வெடிகுண்டுகள் கொண்டு வந்துள்ளனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். குண்டுவெடிப்பில் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தாக்குதலில் மக்கள்  ஆங்காங்கே சிதறினர். 

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 158 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களின் பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 


இந்த நிலையில் காபூலில் நடந்த இந்த பயங்கவரவாத தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’இதுபோன்ற  காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த கொடூரத்துக்கு காரணமானவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் சட்டரீதியாக தண்டனை அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், " ஆப்கான் தாக்குதல் படுமோசமான தாக்குதல். தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலிபானின் தாக்குதல்களை தொடர விடக்கூடாது. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுடன் இணைந்து மீண்டும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும்" என தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP