பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை
 | 

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா எச்சரிக்கை


அமெரிக்க உளவுத்துறை இன்று சமர்ப்பித்த அறிக்கையில், பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள், தொடர்ந்து இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இன்று வருடாந்திர சர்வதேச ஆபத்துகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது, அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள் முதல் பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் வரை பல முக்கிய ஆபத்துகள்  பற்றி தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகளும், இந்திய எல்லையை அச்சுறுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் சஞ்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் டேன் கோட்ஸ் நாடாளுமன்ற கமிட்டியிடம் தெரிவித்த அறிக்கையில், அமெரிக்காவின் எதிர்ப்புகளை மீறி, பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்கள் உருவாக்குவதில் ஈடுபடும் என்றும், தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் என்றார்.

மேலும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அமைதியை குலைக்க முயற்சிப்பார்கள் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP