பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு ஆபத்து

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 | 

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ், உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக அவர் பேசினார்.

அப்போது, ஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் தெற்கு ஆசியாவில் பெரும் சவால்கள் 2019-ல் இருக்கும். 
 
பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குறுகிய எண்ணத்துடன் செயல்படுவதாலும்,  பயங்கரவாத அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துவதாலும் பயங்கரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது. 

இந்த பயங்கரவாத இயக்கங்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தும். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP