வரிவிதிப்பு ராஜாவாகத் திகழும் இந்தியா - ட்ரம்ப் விமர்சனம்

இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரிவிதிக்காமல் இருக்க புதிதாக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள 'வரிவிதிப்பு ராஜா'-வான இந்தியா தானாக முன்வருவதாக அந்தநாட்டு அதிபர்டொனால்டு ட்ரம்ப் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
 | 

வரிவிதிப்பு ராஜாவாகத் திகழும் இந்தியா - ட்ரம்ப் விமர்சனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரிவிதிக்காமல் இருக்க புதிதாக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள 'வரிவிதிப்பு ராஜா'-வான இந்தியா தானாக முன்வருவதாக என அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்து நேற்று இதற்கான ஒப்பந்தம் அமைவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'வரிவிதிப்பு ராஜா' (இந்தியா) அமெரிக்காவுடன் புதிதாக வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக நாசூக்காக கிண்டல் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்தற்கான காரணம் என்ன ? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதித்து வருகிறது. ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் அதிகபட்ச வரிவிகிதம் என்று நாம் கருதுகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இத்தகைய வரிவிதிப்பு இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தகத்துக்கு தடையாக உள்ளது என்றும் இந்த காரணத்தை முன்னிட்டே இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமூகமான நட்புறவு நிலவி வருவதாகவும், இதுவரை அந்த நாட்டு அரசு, வேறு எந்த நாட்டுடனும் இதைப்போன்று ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தது கிடையாது என்று அப்போது ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்படும் என தான் எச்சரித்த நிலையில், அவர்கள் என்னை மகிழ்விப்பதற்க்காக புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்ள முன் வருகிறார்கள் என்று தாம் கருதுவாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP