'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்

ஏற்கெனவே திட்டமிட்டபடி வட கொரியா அதிபரை ஜூன் 12-ம் தேதி சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
 | 

'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்

ஏற்கெனவே திட்டமிட்டபடி வட கொரியா அதிபரை வருகிற 12-ம் தேதி சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். 

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் ஜூன் 12-ல் சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதனை கடந்த மாதம் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரில் நடந்து வந்தன. பின்னர் இருவரும் சந்தித்து பேசும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வட கொரிய அரசு பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தைக்கு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி வட கொரியா அதிபர் கிம் ஜோங், உன்னை, சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் இருவரும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரியப் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் சிங்கப்பூர் உச்சி மாநாட்டின்போது முன்வைக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை: 

'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP