சட்டவிரோத எண்ணெய் விற்பனை: சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'சீனா கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
 | 

சட்டவிரோத எண்ணெய் விற்பனை: சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு


வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை "மிகுந்த வருத்தமளிப்பதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் சர்ச்சைக்குரிய ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த, வடகொரியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை 90 சதவீதம் வரை குறைக்க , அமெரிக்கா ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது. 

ஆனால் சீன கடலில் உள்ள வடகொரிய கப்பல்களுக்கு சீனா எண்ணெய் விநியோகம் செய்வதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், "பியாங்யாங்கிற்கு எண்ணெய் வழங்கிய சீனா கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. வடகொரியா பிரச்னையில் நட்புரீதியான தீர்வு ஏற்படாது" என்று பதிவிட்டுள்ளார்.

 கடந்த 4 மாதங்களாக சீன - வடகொரியா கப்பல்களுக்கு இடையே சட்டவிரோதமாக எண்ணெய் பரிமாற்றம் நடைபெற்றதை சுமார் 30 முறை அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் படம்பிடித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வடகொரியா மீது ஐ.நா விதித்த எண்ணெய் தடைகளை சீனா மீறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் மைக்கெல் கெய்வி, வடகொரியாவுடனான பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP