வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஈலான் மஸ்க்!

பிரபல டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான ஈலான் மஸ்க், தாய்லாந்து குகைகளில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த டைவிங் நிபுணரை தாக்கி பேசியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
 | 

வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஈலான் மஸ்க்!

பிரபல டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான ஈலான் மஸ்க், தாய்லாந்து குகைகளில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த டைவிங் நிபுணரை தாக்கி பேசியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். 

தாய்லாந்து நாட்டின் சியாங் ஹாய் பகுதியில் உள்ள ஆபத்தான குகைகளுக்குள் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்தாட்ட பயிற்சியாளர் கடும் மழை பெய்ததால் சிக்கிக் கொண்டனர். 2 வாரங்களுக்கு பிறகு, அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீச்சல் தெரியாத அவர்களை மீட்க மாதக் கணக்ககலாம் என கூறப்பட்ட நிலையில், டெஸ்லா நிறுவன தலைவர் ஈலான் மஸ்க், ஆழமாக சென்று அவர்களை மீட்க ஒரு கருவியை உருவாக்க உள்ளதாக கூறினார். 

அப்போது, மீட்புப் பணிகளை தலைமை ஏற்று நடத்தி வந்தவர்களில் ஒருவரான பிரிட்டன்  நாட்டை சேர்ந்த டைவிங் நிபுணர் வெர்னன் அன்ஸ்வர்த், மஸ்க் கூறும் திட்டம் முட்டாள் தனமானது என்றும், அவர் இந்த பிரச்சனையை வைத்து விளம்பரம் தேடுவதாகவும் விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் அவருக்கு பதிலடி கொடுக்குமாறு எழுதிய மஸ்க், அன்ஸ்வர்த்தை ஒரு 'பெடோ' என குறிப்பிட்டார். பெடோ என்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நபர்களை குறிக்கும் பெடோபைல் என்ற சொல்லின் சுருக்கமாகும். 

இதைத் தொடர்ந்து, மஸ்க்குக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. பொதுவாகவே, மீடியாக்களின் டார்லிங்காக வலம் வரும் மஸ்க்குக்கு இந்த முறை அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் சேர்ந்தன. தன்னை காரணமில்லாமல் இதுபோல இழிவுபடுத்தியதற்காக, மஸ்க் மீது அவதூறு வழக்கு தொடர வாய்ப்பிருப்பதாக அன்ஸ்வர்த் கூறினார். 

இதைத் தொடர்ந்து, தனது கருத்துக்களுக்கு மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் சில மோசமான கருத்துக்களை தெரிவித்த கோபத்தில் தான் இவ்வாறு பேசிவிட்டதாக மஸ்க் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP