இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தினால்... பாகிஸ்தானை எச்சரித்த அமெரிக்கா

கடந்த மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வந்தபோது, அமெரிக்க அரசு, இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
 | 

அமெரிக்க அரசு தரப்பு பாகிஸ்தானிடம், தீவிரவாதத்துக்கு எதிராக ஸ்திரத்தன்மையுடைய நம்பகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க தரப்பு, இந்தியா மீது இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிகவும் மோசமானதாக மாறும் என்று எச்சரித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க தரப்பு மேலும் கூறுகையில், பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். தற்போது நிலவும் சூழலில் இந்தியா மீது  இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மோசமானதாக மாறும். இரு நாட்டுக்கும் இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும் என்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP