ஒரு வருடம் வேண்டுமானாலும் அரசை மூடியே வைப்பேன்: ட்ரம்ப் அதிரடி

இரண்டு வாரங்களுக்கு மேலாக அமெரிக்க அரசு பட்ஜெட் இல்லாமல் முடங்கியுள்ள நிலையில், எல்லை சுவருக்காக, ஒரு வருடத்திற்கு கூட அரசை முடி வைப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
 | 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெற்கு எல்லையில் மாபெரும் சுவர் கட்டுவதற்காக 5 பில்லியன் டாலர் நிதியை கோரியிருந்தார். இந்த சுவர் திட்டத்திற்கு நிபுணர்கள் மத்தியில் ஆதரவு இல்லாததால், நாடாளுமன்றம் நிறைவேற்றிய பட்ஜெட்டில் இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.இதற்கு பதிலடியாக, அமெரிக்க அரசு இயங்குவதற்கான சம்பள பட்ஜெட்டை நிறைவேற்றவிடாமல், 5 பில்லியன் டாலர்களை முடக்கி வைத்தார் அதிபர் ட்ரம்ப். இதனால், நிதி இல்லாமல் அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளது. 

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி முதல் பல முக்கிய துறைகள் முடங்கியுள்ளதால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை காலத்தில் வீடு திரும்பினர். மேலும் பல அத்தியாவசிய தேவைக்கான அரசு ஊழியர்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினருடன் நேற்று ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு வருடம் ஆனாலும் அரசை முடக்கி வைப்பேன். அது நடக்க வேண்டிய அவசியமில்லை. அரசை மீண்டும் நடத்த என்ன தேவையோ அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது" என்று ட்ரம்ப் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP