7-லும் 16-லும் வன்புணர்வு செய்யப்பட்டேன்: பன்முக நட்சத்திரமான பத்மா லட்சுமி வேதனை 

தனது 7வது வயதிலும் 16வது வயதிலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியாவில் பிறந்த அமெரிக்க வாழ் பிரபல எழுத்தாளரும், மாடலும் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான பத்மா லட்சுமி அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

7-லும் 16-லும் வன்புணர்வு செய்யப்பட்டேன்: பன்முக நட்சத்திரமான பத்மா லட்சுமி வேதனை 

பிரபல சர்ச்சைக்குரிய 'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நாவலை எழுதிய சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி பத்மா லட்சுமி, தனது 7வது வயதிலும் 16வது வயதிலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச அளவில் பலதரப்பட்ட பெண்களும் #METOO என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தாங்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த வன்புணர்வு சம்பவங்களை இதுவரையில் எந்த அரங்கிலும் பேசிடாத விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீராங்கனைகள், நடிகைகள், தொழில்முனைவர்கள், மாடல்கள் என பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் தொடர்ந்து இதுபோல வெளிப்படையாக கூறி வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக முன்மொழியப்பட்ட நீதிபதி பிரட் காவானாக் மீது சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர், எழுத்தாளர், மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகை என பன்முக துறைகளில் சாதித்திருக்கும் பத்மா லட்சுமி இது தொடர்பாக, 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். 

அதில் அவர், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ''எனக்கு 7 வயதாக இருந்தபோது நான் இந்தியாவில் இருந்தேன். அப்போது விடுமுறையில் என் தாய்வீட்டில் இருந்தேன். உடன் எனது தாத்தா, பாட்டி தான் இருந்தனர். அவர்கள் வெளியே சென்றபோது அங்கிருந்த எனது தூரத்து உறவினர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். பாலியல் ரீதியாகவும் என்னை வன்புணர்வு செய்தார். சரியாக அது தான் வன்புணர்வு என எனக்கு தெரியாது. ஆனால் அது குறித்து நான் தாயிடமும், என் வளர்ப்புத் தந்தையிடமும் கூறினேன். அவர்கள் என்னை வாயை மூடு, இவ்வாறு பேசினால், நீ வீட்டைவிட்டு துரத்தப்படுவாய் என்று கண்டித்தனர். 

அதன்பின், எனக்கு 16 வயதில் ஒரு அழகிய இளைஞரோடு பழகினேன். அது தான் டேட்டிங் என்று தெரியாது. ஆனால் அவருடன் வெளியே சென்றேன். அவருக்கு 23 வயது இருக்கும். சில மாதங்கள் அவரோடு பழக்கம் இருந்தது. வெளியே சென்றபோது அயர்ந்து தூங்கிய நான் விழித்துப் பார்த்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை உணர்ந்தேன். அன்று என்னை பள்ளியில் இருந்து அழைத்து வேறு எங்கோ அழைத்துச் சென்று, பின் இரவு நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றான். அன்று அதிகாலையில் விழித்துப் பார்த்தபோது நான் வன்புணர்வு செய்யப்பட்டதை உணர்ந்தேன். அதற்கான அனைத்து அடையாளங்களும் என் உடலில் இருந்தன.

நானும், என் தாயும் அவனிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். எனக்கு அந்த நேரத்தில் டேட்டிங், வன்புணர்வு குறித்து தெரியாது. அந்த சம்பவம் எனக்கும் அந்த இளைஞருக்கும் நடந்த பாலுறவா? அல்லது நான் வன்புணர்வு செய்யப்பட்டேனா? என்பதைக்கூட என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை. ஆனால், அதன்பின் என் வாழ்க்கையில் வந்த பல ஆண் நண்பர்களிடம் நான் இதனை கூறியதில்லை. நான் கன்னித்தன்மையோடு உள்ள பெண் என பெருமையாகக் கூறுவேன். அவமானம் மற்றும் அச்சம் காரணமாக அப்படி கூறுவேன். இப்போதும் அப்படியே கூறுகிறேன்'' என்று அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP