மரியானா தீவுகளை தாக்கியது யூட்டு புயல்... ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

அமெரிக்க பிராந்தியமான வடக்கு மரியானா தீவுகளை, யூட்டு புயல் தாக்கியதில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் தற்போது, பிலிப்பைன்ஸ், தைவான் நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
 | 

ஆசிய கண்டத்திற்கு அருகே உள்ள அமெரிக்க பிராந்தியமான மரியானா தீவுகளை, யூட்டு என பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று கடுமையாக தாக்கியது. கேட்டகரி 5க்கு சமமான இந்த புயலால், சுமார் 280 கிமீ வேகத்தில் புயல்காற்று வீசியது. மரியானாவிலேயே மிகப்பெரிய தீவுகளான சைபன் மற்றும் டினியன் தீவுகள் இதில் கடுமையாக சேதமடைந்தன. இரு தீவுகளின் வரலாற்றிலேயே மிக மோசமான புயல் இதுதான் என கூறப்படுகிறது. 

சுமார் 55,000 பேர் வாழும் இந்த தீவுகளில் ஆயிரக்கணக்கனோர் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த ஆண்டின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகவும் யூட்டு பார்க்கப்படுகிறது. மரியானா தீவுகளை கடந்து, பிலிப்பைன்ஸ், தைவான் நாடுகளை நோக்கி யூட்டு சென்றுகொண்டிருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP