வடகொரியா- தென் கொரியா இடையே ஹாட் லைன் வசதி தொடக்கம்

வடகொரியா- தென் கொரியா இடையே ஹாட் லைன் தொலைபேசி வசதி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
 | 

வடகொரியா- தென் கொரியா இடையே ஹாட் லைன் வசதி தொடக்கம்


வடகொரியா- தென் கொரியா இடையே ஹாட் லைன் தொலைபேசி வசதி நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் வடகொரியா அதிபருக்கும், அமெரிக்க அதிபருக்கும் இடையே அணு ஆயுதம் தொடர்பாக இருவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், "அணு ஆயுத சோதனையில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். என்னுடைய மேஜையில் அணு ஆயத ஏவுகணையை செலுத்தும் பட்டன் எப்போதும் உள்ளது. அதை பயன்படுத்தி எந்த ஒரு நாட்டிலும் அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்த முடியும்" என கூறி இருந்தார்.  


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப், "உங்களிடம் இருப்பதை விட பெரிய பட்டன் ஒன்று என் மேஜையில் உள்ளது. அது உங்கள் பட்டனை விடட மிகவும் சக்தி வாய்ந்தது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் அது நன்றாக வேலை செய்யும்" என கூறியிருந்தார்.  

அமெரிக்கா-வடகொரியா அதிபர்களுக்கு இடையே நடக்கும் இந்த விளையாட்டை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது வடகொரியா- தென் கொரியா இடையே ஹாட் லைன் தொலைபேசி வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த இந்த ஹாட்லைன் தொலைபேசி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP