ஹாலிவுட் நடிகைகளிடம் அத்துமீறல்: ஹார்வி மீது வன்புணர்வு வழக்கு பதிவு

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் வன்புணர்வு, பாலியல் குற்றச்செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
 | 

ஹாலிவுட் நடிகைகளிடம் அத்துமீறல்:  ஹார்வி மீது வன்புணர்வு வழக்கு பதிவு

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் வன்புணர்வு, பாலியல் குற்றச்செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

100க்கும் அதிகமான நடிகைகள் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மீது வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின்  மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்திருப்பது, அவர் செய்த பாலியல் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது" என்றார்.

ஹார்வி வெயின்ஸ்டீன் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராப்மேன், "ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து இருப்பது ஒன்றும் வியப்புக்கு உரியது அல்ல. குற்றச்சாட்டு பதிவு என்பது வெறுமனே சட்டப்படி குற்றம் சாட்டுவது மட்டும்தான். அவற்றை நிரூபிக்க எதுவுமே இல்லை" என்று குறிப்பிட்டார்.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. விசாரணை ஜூலை இறுதியில் நடக்க இருக்கிறது. 

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (66). இவர் மீது ஹாலிவுட் பிரபலங்கள் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக், ஆஷ்லே ஜூட் போன்றோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அவரது பாலியல் விவகாரங்களை அம்பலப்படுத்தியதால் ஹாட்விக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரணடைந்து பின்னர் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ஜாமீனில் வெளியே வந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP