டொனால்ட் ட்ரம்ப் பெயரின் மீது ஹிட்லரின் 'நாஜி' சின்னம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வைக்கப்பட்ட நட்சத்திர சின்னத்தில், ஹிட்லரின் 'நாஜி' சின்னம் வரையப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 | 

டொனால்ட் ட்ரம்ப் பெயரின் மீது ஹிட்லரின் 'நாஜி' சின்னம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வைக்கப்பட்ட நட்சத்திர சின்னத்தில், ஹிட்லரின் 'நாஜி' சின்னம் வரையப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதி சினிமாவுக்கு மிகப்பிரபலம். அதனாலேயே அமெரிக்க சினிமாவை ஹாலிவுட் என அழைக்கின்றனர். இங்கு உள்ள ஹாலிவுட் போலவார்ட் என்ற இடத்தில், நடைபாதையில் பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பிரபலங்களின் பெயரோடு நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் ஒரு சின்னம் உண்டு. இதன் மீது, நேற்று ஒருவர் ஹிட்லரின் 'நாஜி' சின்னமான ஸ்வஸ்திகாவை வரைந்து விட்டு சென்றார். இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் அங்கு விரைந்து குற்றவாளியை கைது செய்தனர். பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், சிறுபான்மையினரை வெறுக்கும், நிறவெறி பிடித்த பலர் தங்களை நாஜிக்கள் என அடையாளப்படுத்தி கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. இது போன்றவர்கள் பலர், 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய ஒரு பேரணியில் நாஜி கோடி பறந்தது, சர்ச்சையை கிளப்பியது. அது குறித்து பேசிய போது, நாஜிக்களுக்கு கண்டனம் தெரிவிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார். இதனாலேயே, நாஜிக்களுக்கு நெருக்கமானவர், என ட்ரம்ப் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளார். 

2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன், ட்ரம்ப் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவரின் ஹாலிவுட் சின்னம் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP