அமெரிக்காவில் ஹிந்து கோயில் சூறையாடல்

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள நாராயணசாமி கோயிலில் ஜன்னல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. கோயிலின் மையப் பகுதியில், நாற்காலி ஒன்றின் மீது கத்தியை குத்திய நிலையில் மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
 | 

அமெரிக்காவில் ஹிந்து கோயில் சூறையாடல்

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் ஹிந்து கோயிலை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். குறிப்பாக, சாமி சிலை மீது கருப்பு மையை அவர்கள் தெளித்துள்ளனர்.

கெண்டக்கி மாகாணத்தின் லூயில்வில்லே நகரில் நாராயணசாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூலவர் மீது கருப்பு மை தெளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் மிரட்டல் தொனியிலான வாசங்களை எழுதி, படங்களையும் மர்ம நபர்கள் வரைந்துள்ளனர். கோயிலின் மையப் பகுதியில், நாற்காலி ஒன்றின் மீது கத்தியை குத்தி வைத்த நிலையில் மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற வெறுப்புணர்வுகளுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று லூயில்வில்லே நகர மேயர் கிரெக் பிஸ்ச்செர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP