பாகிஸ்தானில் முதன்முறையாக செனட் உறுப்பினராக இந்து தலித் பெண் தேர்வு

பாகிஸ்தான் மேலவை (செனட்) உறுப்பினராக இந்து சமூகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன பெண் ஒருவர் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
 | 

பாகிஸ்தானில் முதன்முறையாக செனட் உறுப்பினராக இந்து தலித் பெண் தேர்வு

பாகிஸ்தானில் முதன்முறையாக செனட் உறுப்பினராக இந்து தலித் பெண் தேர்வுபாகிஸ்தான் மேலவை (செனட்) உறுப்பினராக இந்து சமூகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன பெண் ஒருவர் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கிருஷ்ண குமாரி கோலி என்ற பெண்மணி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். இவர், சிந்து மாகாணத்தில் இருந்து செனட் அவைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். சிறுபான்மையினர் பிரிவில் அவருக்குப் பாகிஸ்தான் மக்கள் கட்சி சீட் வழங்கியது. 

இது குறித்துக் கிருஷ்ண குமாரி கோலி கூறுகையில், "பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைக்கான முன்னெடுப்பில் இது மிக முக்கியமான மைல் கல் ஆகும்" என்றார். 

இதற்கு முன்பு செனட் அவைக்குச் சிறுபான்மையினர் என்ற பிரிவில் பல இந்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், செனட் அவைக்கு இந்து மதத்தைச் சேர்ந்த முதல் பெண்ணா ரத்னா பகவான்தாஸ் சாவ்லா தேந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், கோலியோ, சிந்து மாகாணத்தின் தார் என்ற மிகவும் பின்தங்கியுள்ள பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

பாகிஸ்தானில் முதன்முறையாக செனட் உறுப்பினராக இந்து தலித் பெண் தேர்வு

இவ்வளவு பின்தங்கிய பகுதியில் இருந்து ஒருவர் செனட் உறுப்பினர் என்ற தகுதியை அடைந்திருப்பதற்கு அவருக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

கிருஷ்ண குமாரியின் குடும்பம் மிக ஏழ்மையானது. அவரது பெற்றோர், வாங்கிய கடனை அடைக்காததால், கடன் கொடுத்தவர்களால் மூன்று ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டனர். 9ம் கிரேட் படிக்கும்போது லால்சந்த் என்பவருடன் கிருஷ்ண குமாரிக்குத் திருமணம் நடந்தது. அதன்பிறகும் தொடர்ந்து படித்த அவர், 2013ல் தன்னுடைய முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வந்தார். இவரது கொள்ளுத்தாத்தா இந்திய சுதந்திர போராட்ட தியாகி. 1850-களில் சிந்து பகுதியில் சுதந்திரத்துக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அவரை 1857ம் ஆண்டு ஆங்கிலேய அரசு கைது செய்தது. அடுத்த ஆண்டே அவரைத் தூக்கிலிட்டது. 

செனட் அவைக்கு நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம், பாகிஸ்தான் மேலவையின் மிகப்பெரிய கட்சியாக நவாஸ் ஷெரீப்பின் கட்சி உருவெடுத்தள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP