மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி

நேற்று மெக்சிகோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

நேற்று அதிகாலை மெக்சிகோ நகரில் 7.2 ரிக்டர் என்ற அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மீட்புப்பணிக்காக உள்துறை அமைச்சர் அல்போன்சின் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் கீழே மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பலர் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP