100 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு; கண்காணிப்பில் எமிரேட்ஸ் விமானம்

நியூயார்க் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில், 100க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அந்த விமானம் மருத்துவ நிபுணர்களால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
 | 

100 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு; கண்காணிப்பில் எமிரேட்ஸ் விமானம்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில், 100க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மருத்துவ நிபுணர்களால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

துபாயில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், காலை 9 மணியளவில் தரையிறங்கியது. ஏர்பஸ் A388 ரகத்தை சேர்ந்த அந்த பெரிய விமானத்தில், மொத்தம் 521 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, பயணிகள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் சில பயணிகள் அவதிப்படுவதாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், விமானம் தரையிறங்கிய உடனே, அதில் இருந்து 10 பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

பின்னர், மொத்தம் 100 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்திற்கு விரைந்தனர். பயணிகளுடன் அந்த விமானம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. நோய் தடுப்பு பிரிவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகளை சோதனை செய்து, அவர்களுக்கு எந்த நோய் இருக்கும் அறிகுறி இல்லையென உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் வெளியே அனுப்பப்படுகின்றனர். இந்த சம்பவம் நியூ யார்க் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP