ஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா

ஹவாய் தீவில் ஏற்பட்டு வரும் தொடர் எரி மலை சீற்றத்தால் தீவின் வரை படமே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக அங்கு உருவாகியுள்ள மலை போன்ற நிலப்பரப்புக்கு அமெரிக்கா உரிமை கோரியுள்ளது.
 | 

ஹவாய் எரிமலை வெடிப்பால் புதிய நிலப்பரப்பு: உரிமை கோரியது அமெரிக்கா

ஹவாய் தீவில் ஏற்பட்டு வரும் தொடர் எரிமலை சீற்றத்தால் தீவின் வரை படமே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக அங்கு உருவாகியுள்ள மலை போன்ற நிலப்பரப்புக்கு அமெரிக்கா உரிமை கோரியுள்ளது.

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இங்குள்ள கிலாயூ என்ற எரிமலை வெடித்தது. இதனால் கடந்த 2 வாரமாக மிகப்பெரிய அழிவை  ஹவாய் தீவு சந்தித்து வருகிறது. பல லட்சம் ஏக்கருக்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டருந்ததால், பெரும்பாலான மக்கள் தீவை காலி செய்து வேறு தீவுக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் ஒரு சிலர் மட்டும் கிலாயூ எரிமலைத் தீவில் தங்கிவிட்டனர். கடைசியில் எரிமலை வெடித்தபிறகு இவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால், தப்பிச் செல்லும் பாதை முழுக்க எரிமலை குழம்பு சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

வேறு விதத்தில் அவர்களில் பலர் மீட்கப்பட்டனர். சிலர் எரிமலை குழம்பில் சிக்கி உயிரிழந்தனர். இந்த லாவா குழம்புகள் பரவிய காரணத்தால், ஹவாயில் உள்ள கபோஹோ என்ற இடமே அழிந்து போனது. இங்கு இருக்கும், ஹவாயின் பெரிய ஏரி ஆவி ஆகிவிட்டது. எரிமலை குழம்பு இறுகி, அந்த இடமே புதிய மலை போல அந்த காட்சி அளிக்கிறது. இதனால், ஹவாய் தீவின் வரைப்படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், வேறு யாரும் புதிய நிலப்பரப்புக்கு உரிமை கோராமல் இருக்க, முறைப்படி புதிய நிலப்பரப்பு அமெரிக்க அரசுக்குத்தான் சொந்தம் என்று அமெரிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிலாயூ எரிமலை 1975ல் இருந்தே வெடிக்கும் நிலையில் இருந்தது. தற்போது, 2018ல்தான் இந்த எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பால் இதுவரை 300 க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 50,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் காரணமாக  ஹவாய் தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP