ஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன?

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
 | 

ஹபீஸ் சையது கைது : அமெரிக்க அதிபர் சொன்னதென்ன?

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பண மோசடி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், ஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, " மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது, பத்து ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கண்டறிந்து கைது செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்துள்ளது" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP