எச்-1பி விசா சர்ச்சை; 7.5 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து

எச்-1பி விசா சர்ச்சை; 7.5 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து
 | 

எச்-1பி விசா சர்ச்சை; 7.5 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து


அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசா மீது பல கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த வருடம் உத்தரவிட்டார். அமெரிக்காவில் பணிபுரிய புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த இந்த திட்டத்தை தளர்த்த, இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், எச்-1பி விசா நீட்டிப்பை ரத்து செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. 

எச்-1பி விசாவை 3 வருட காலத்திற்கு 2 முறை நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், நிரந்தரமாக அங்கு பணிபுரிய வழங்கப்படும் க்ரீன் கார்டு வாங்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு மட்டும் கூடுதல் நீட்டிப்பும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், எச்-1பி விசாவை நீட்டிக்கும் சலுகைகளை ரத்து செய்ய டிரம்ப் அரசு முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த டிரம்ப் எடுத்து வரும் சில முயற்சிகளில் ஒன்றாக இந்த விசா நீட்டிப்பு ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "அதிபர் டிரம்ப்பின் 'அமெரிக்கா முதலில்' கொள்கையை நிறைவேற்ற பல முயற்சிகள் எடுத்து வருகிறோம்" என்று கூறினர்.

இந்த முயற்சியில் டிரம்ப் அரசு வெற்றி பெற்றால், க்ரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள 5 லட்சம் முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வரை, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP